வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் வாடிவாசல்.! மிரட்டலாக வெளியானது டைட்டில் லுக்.!
சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூலை 23- ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்பட்டது. அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன் #VaadiVaasalTitleLook @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal pic.twitter.com/R6HXjYxvL2
— Kalaippuli S Thanu (@theVcreations) July 16, 2021