வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30க்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு ஜூலை 23- ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியீடப்பட்டது. அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார். அதன் படி, வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 5:30 வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில் “வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை நாளை மாலை 5:30’க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…