வாடிவாசல் திரைப்படத்தில் வடசென்னை ராஜன்…?
வாடிவாசல் திரைப்படத்தில் இய்குனரும், நடிகருமான அமீர் முக்கியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு இந்த வருட இறுதியில், தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கான டைட்டில் லுக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், வாடிவாசல் திரைப்படத்தில் இய்குனரும், நடிகருமான அமீர் முக்கியான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.