கொரோனாவை தடுக்க தடுப்பூசி போதுமானதாக இருக்காது- WHO தலைவர்.!
கொரோனா தொற்றை தடுக்க ஒரு தடுப்பூசி போதுமானதாக இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் திங்கட்கிழமையன்று ஒரு தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவிய சில மாதங்களுக்கு பிறகு ,தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 மில்லியனை கடந்தும் , 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களையும் கொரோனா கொன்றுள்ளது . ஒரு தடுப்பூசி நம்மிடம் உள்ள மற்ற கருவிகளை பூர்த்தி செய்யுமே ஒழிய அவற்றை மாற்றாது என்றும், ஒரு தடுப்பூசி கொரோனோ வைரஸ் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வராது என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
திங்களன்று உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின் படி , 660,905 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.