ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்..! தடுப்பூசியை போட்டுக் கொண்ட ஆஸ்திரேலியா பிரதமர்…!
ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று காலை தொடங்கியது. முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிகவும் மும்முரமாக களம் இறங்கியது. அந்த வகையில் தற்போது சில தடுப்பூசிகளை உபயோகிக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று காலை தொடங்கியது. முன்கள பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ஸ்காட் மோரிசன் தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆஸ்திரேலியாவில் இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற ஜேன் மலிஸியாக் ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்ட முதல் ஆஸ்திரேலிய நபராவார்.
இதுகுறித்து அந்நாட்டு சுகாதார மந்திரி அவர்கள் கூறுகையில், தடுப்பூசிகளின் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக, அரசியல் தலைவர்கள் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.