கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பிறநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருவதால், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என தளர்வுகளை சில நாடுகள் கொடுக்கிறது.
அந்த வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டிலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் சுற்றுலாவிற்கு வரலாம் என கூறப்பட்டது. இது குறித்து பிரான்ஸ் நாட்டின் அதிகாரிகள் கூறும் பொழுது, ஏற்கனவே பிரான்ஸ் நாட்டிற்குள் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டிற்குள் சுற்றுலாவிற்காக வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸ் நாட்டிற்குள் சுற்றுலா பயணிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் வருவதற்கு பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்ற பிற நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வரலாம் எனவும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களுக்கு குரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…