தடுப்பூசி செலுத்திய இந்திய பயணிகளுக்கு அனுமதி – சுவிச்சர்லாந்து அரசு!

இனிமேல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்திய பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை இன்றி தங்கள் நாட்டிற்குள் அனுமதி அளிக்கப்படும் என சுவிச்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் பரவி வந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால் பல நாடுகள் இந்திய பயணிகள் தங்கள் நாடுகளுக்கு நுழைவதற்கு அனுமதி மறுத்தது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்தையும் பல நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளதால், சுவிச்சர்லாந்து அரசு இந்தியாவுடனான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது. அதன்படி ஜூன் 26-ஆம் தேதி முதல் சுவிச்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய பயணிகள் பரிசோதனை இன்றி தங்கள் நாடுகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என சுவிச்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025