வாத்தி கம்மிங் வீடியோ பாடல் தற்போது வரை யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியிருந்த இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் பல பிரபலங்கள் தங்களது படத்தை ஓடிடி தலத்தில் வெளியிட்டனர். ஆனால், விஜயின் மாஸ்டர் திரைப்படம் தான் ஒரு வருடத்திற்கு பின் திரையரங்கில் வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டையை நடத்தி தற்போது வரை 220 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து நாளை ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது.
இதனை தொடர்ந்து நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் வீடியோ பாடலை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். இந்த பாடல் தற்போது வரை யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…