வாழைப்பழத்தை எப்பொழுது சாப்பிட வேண்டும் தெரியுமா….?
வாழைப்பழத்தை பிடிக்காதவர்கள் மிக குறைவானவர்களே. வாழைப்பழம் நம் உடலுக்கு தேவையான சத்துக்களை கொண்ட ஒரு பழம். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பழம் இது. ஆனால் இதை சரியான நேரத்தில் சாப்பிட்டால் தான் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லையென்றால் இது நம் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய பழமாக மாறி விடும்.
வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இரவில் வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை மட்டும் சாப்பிட்டால், அது வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது போக, உடலில் சளியை உருவாக்கி கபத்தை அதிகப்படுத்தும்.
வாழைப்பழத்தை எப்போது சாப்பிடலாம் தெரியுமா…?
வாழைப்பழங்களை மதிய வேளையில் சாப்பிடுவது தான் சிறந்தது. நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது ஒரு மணி நேரம் கழித்தோ எடுத்துக் கொண்டால் செரிமானத்திற்கு உதவி நெஞ்செரிச்சலை தடுக்கிறது.