சீனாவில் தற்போது புதியதாக பரவி வரும் நோய் “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல். இந்த காய்ச்சல் முதலில் சீனாவின் மத்திய நகரான வூஹானில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகரில் மொத்தமாக ஒரு கோடியே 10 லட்சம்பேர் வசித்து வருகின்றனர்.
இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சுவாசப்பிரச்சினை காரணமாக உயிரிழக்கின்றனர். வூஹான் நகரில்மட்டும் 170 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அவர்களில் 9 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.சீனா மொத்தமாக 201 பேருக்கு கொரனா வைரஸ் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
வூஹான் நகரில் மட்டும் 1,700 பேர் கொரனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் உலக தொற்றுநோய் ஆய்வு மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.வூஹான் நகரில் உறவினர்களை பார்த்து விட்டு வீடு திரும்பிய தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளை சார்ந்த 3 பேருக்கு இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் சீனா முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த வைரஸ் ஒரு விலங்கு மூலம் மனிதனுக்கு பரவியதாகவும் பின்னர் மனிதனிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாகவும் கூறப்பட்டுகிறது.
மேலும் இந்த வைரஸ் இந்தியாவில் பரவிவிடுமோ என்ற எண்ணத்தில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் அனைத்து பயணிகளிடம் இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்டுகிறார்கள்.இந்நிலையில் இதுவரை 3 பேர் உயிரிழந்தது நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…