இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு!
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் போராளிகள் காசா முனையிலிருந்து தாக்குதல் நடத்தி இருந்தனர் . இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குதல் நடத்தியது இதில் 4 பேர் கொல்லபட்டனர்.
இதற்க்கு கருத்து தெரிவிக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது டிவிட்டர் பக்கத்தில், மீண்டும் மீண்டும் ஹமாஸ் மற்றும் ஜிஹாத் அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள திருப்பி எதிர்த்தாக்குதல் நடத்தியதற்கு அமேரிக்கா ஆதரவு அளிக்கிறது எனவும்,
இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதால், காசா அந்த அமைப்புகளுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. மாறாக மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இரு தரப்பும் தாக்குதலை நிறுத்திவிட்டு அமைதியை நாட வேண்டும் அதுவே மக்க்களுக்கு நல்லது என தனது கருத்துக்களை டிவிட்டரில் தெரிவித்தார் ட்ரம்ப்.
DINASUVADU