அமெரிக்கா : நவம்பர் 8 முதல் கோவாக்சின் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு அனுமதி ….!

நவம்பர் 8 முதல் கோவாக்சின் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு அமெரிக்காவிற்குள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய கொரோனா தடுப்பூ சியான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி முதல் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்காததால் பல நாடுகள் புறக்கணித்து வந்த நிலையில், தற்போது அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அமெரிக்கா முதன் முதலாக தங்கள் நாட்டிற்குள் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பயணிகளுக்கு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.