உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்ய போர் கால பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தினார் அதிபர் டிரம்ப்…

Published by
Kaliraj

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது  1,02,325 ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில்  நேற்று ஒரே நாளில் மட்டும்  401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரத்தில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு 10 பேரில் 9 பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் செயற்கை சுவாசக் கருவிகளுக்கு கடும்  தட்டுப்பாடும்  நிலவி வருகிறது. அங்கு ஒரு செயற்கை சுவாசக் கருவியை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தற்போது  பெருகிவரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்த  உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின்  பற்றாக்குறையை போக்க அமெரிக்க ஜனாதிபதி  ஜெனரல் மோட்டார்ஸை வென்டிலேட்டர்களை உடனடியாக உற்பத்தி செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,  

  • செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிக்கும் ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ்,
  • பிலிப்ஸ்,
  • மெட்ரோனிக்,
  • ஹேமில்டன்,
  • ஜோல்,
  • ரெட்மெட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய அரசு பேச்சு நடத்தி வருகிறது.

எனவே வரும்  100 நாட்களில் சுமார் ஒரு லட்சம் செயற்கை சுவாசக் கருவிகளை தயார் செய்யவுள்ளது. இத்தனை கருவிகளையும் அமெரிக்காவே பயன்படுத்த முடியாது. எனவே,  தேவைப்படும் நாடுகளுக்கும் இந்த கருவிகள்  அளிக்கப்படும் என்றும், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெல்லும் வரை தொடர்ந்து அமெரிக்க அரசு முழுவலிமையையும் இறக்கி பணியாற்றுவோம் என்றும், அமெரிக்காவின் பொருளாதார சக்தி, அறிவியல் சக்தி, மருத்துவ சக்தி, ராணுவ சக்தி, உள்நாட்டு பாதுகாப்பு என  அனைத்தையும் பயன்படுத்தி இந்த கொரோனா வைரஸை ஒழிப்போம் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு! 

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

1 hour ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

2 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

2 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

3 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

3 hours ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

3 hours ago