உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி செய்ய போர் கால பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தினார் அதிபர் டிரம்ப்…
உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 1,02,325 ஆக உயர்ந்து உள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரத்தில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு 10 பேரில் 9 பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் செயற்கை சுவாசக் கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அங்கு ஒரு செயற்கை சுவாசக் கருவியை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தற்போது பெருகிவரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்த உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை போக்க அமெரிக்க ஜனாதிபதி ஜெனரல் மோட்டார்ஸை வென்டிலேட்டர்களை உடனடியாக உற்பத்தி செய்ய போர்க்கால பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை நடைமுறைப்படுத்தி உத்தரவிட்டு உள்ளார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,
- செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிக்கும் ஜெனரல் எலெக்ட்ரிக்ஸ்,
- பிலிப்ஸ்,
- மெட்ரோனிக்,
- ஹேமில்டன்,
- ஜோல்,
- ரெட்மெட் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய அரசு பேச்சு நடத்தி வருகிறது.
எனவே வரும் 100 நாட்களில் சுமார் ஒரு லட்சம் செயற்கை சுவாசக் கருவிகளை தயார் செய்யவுள்ளது. இத்தனை கருவிகளையும் அமெரிக்காவே பயன்படுத்த முடியாது. எனவே, தேவைப்படும் நாடுகளுக்கும் இந்த கருவிகள் அளிக்கப்படும் என்றும், கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெல்லும் வரை தொடர்ந்து அமெரிக்க அரசு முழுவலிமையையும் இறக்கி பணியாற்றுவோம் என்றும், அமெரிக்காவின் பொருளாதார சக்தி, அறிவியல் சக்தி, மருத்துவ சக்தி, ராணுவ சக்தி, உள்நாட்டு பாதுகாப்பு என அனைத்தையும் பயன்படுத்தி இந்த கொரோனா வைரஸை ஒழிப்போம் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.