மனைவிக்கே தெரியாமல் விவாகரத்து செய்து விட்டு அவருக்கு ‘ஷாக்’ கொடுத்த கணவன்!
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் நிக்சன். 50 வயதை கடந்த இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்து இருந்துள்ளார்.
மேலும் அந்த மனுவின் தனது மனைவியில் கையெழுத்தையும் போட்டு, மனைவி பெயரில் போலி ஆவணங்களை தயார் செய்துசமர்ப்பித்துள்ளார். இதனை பார்த்த நீதிமன்றம் இவர்க்கு விவாகரத்து அளித்துவிட்டார்.
பின்னர் இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே சண்டை வர, விவாகரத்து விஷயத்தை உளறிவிட்டார். உடனே சுதாரித்த அந்த அவரது மனைவி, போலீசில் புகார் கூறியது.
பின்னர் விசாரிக்கையில் இவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலி, கையெழுத்தும் போலி என்பதை கண்டறிந்த நீதிமன்றம் இவர்களது விவகாரத்தை ரத்து செய்த்து. இந்த விவகாரத்தின் நடுவே நிக்சன் எஸ்கேஎப் ஆகிவிட்டார்.
தற்போது அவரை அமெரிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகிறது. கண்டறிந்து குற்றங்கள் கண்டறியப்பட்டால், 10 ஆண்டு சிறை நிச்சயம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.