அமெரிக்கா : ஹேண்டுராஸ் நாட்டின் முன்னாள் குடியாரசு தலைவர் மனைவிக்கு 58 ஆண்டுகள் சிறை!

Default Image

மத்திய அமெரிக்காவிலுள்ள, ஹேண்டுராஸ் நாட்டில் முன்னாள் குடியரசுத் தலைவர் போர்ஃபிரீ – ஓ – லோபோ அவர்களின் மனைவி பொனிலா, நாட்டு மக்களின் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி அவருக்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

போர்ஃபிரீ – ஓ – லோபோ ஹேண்டுராஸ் நாட்டின் குடியரசு தலைவராக இருந்துள்ளார். நான்காண்டு ஆட்சி காலத்தில் அவர், அந்நாட்டிற்கு வந்த சர்வதேச நன்கொடை மற்றும் மக்கள் வரிப்பணத்திலிருந்து 7,79,000  டாலர் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘ ஊழல் செய்த பணத்தை அதிபரின் மனைவி நகைகள் வாங்கவும், மருத்துவ செலவுக்கும் தங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவுக்காகவும் முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர் என குற்றம்சாட்டினார். அதனை தொடர்ந்து போனிலாவிற்கு 58 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

பொனிலாவிற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், பொனிலா நிரபராதி என கூறினார். மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் எனவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் பொனிலாவின் உதவியாளருக்கும் ஊழளில் பங்குண்டு என கூறி, அவருக்கு 48 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகள் அறிவிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் பொனிலாவும் அவரது கணவரும் நீதிமன்றத்தில் இல்லை என தகவல் வெளியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்