அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாடுகளின் இயல்பு வாழ்கையை பாதித்துள்ளது. இதுவரை உலகம் முழுக்க 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
உலகளவில் வல்லரசு நாடாக பார்க்கப்படும் அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை அங்கு 2,44,877 பேரை கொரோனா பாதித்துள்ளது. கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1,15,242 ஆக உள்ளது. கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது.