“நவராத்திரி” வாழ்த்துகள் தெரிவித்த அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்.!
அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் நவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கும் இடையே பெரிய போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது, கமலா ஹாரிஸ் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
அவர், தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது, இந்து அமெரிக்க நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மற்றும் நவராத்திரியை கொண்டாடும் அனைவருக்கும் மிக இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்.
மேலும், இந்த விடுமுறை எங்கள் சமூகங்களை உயர்த்துவதற்கும், அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நியாயமான அமெரிக்காவைக் கட்டியெழுப்புவதற்கும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக அமையட்டும் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
.@DouglasEmhoff and I wish our Hindu American friends and family, and all those celebrating, a very Happy Navratri! May this holiday serve as an inspiration to all of us to lift up our communities and build a more inclusive and just America.
— Kamala Harris (@KamalaHarris) October 17, 2020