அமெரிக்க துணை அதிபர் ஆசிய நாடுகளுக்கு பயணம்..!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின் ஒரே வாரத்தில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்கிறார். இன்று காலை அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளை அங்கிருக்கும் முக்கிய தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.