அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சென்ற விமானம் பழுது…! அவசர அவசரமாக தரையிறக்கம்….!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சென்ற முதல் சர்வதேச பயணம்.
- தொழிநுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று முதன்முறையாக கௌதமாலாவுக்கு நேற்று மதியம் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இவர் தனி விமானத்தின் மூலம் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து, அவர் சென்ற விமானத்தில் திடீரென தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனையடுத்து, வாஷிங்டனில் உள்ள, ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கமலா ஹாரிஸ் திட்டமிட்டபடி, வேறொரு விமானத்தின் மூலம், கௌதமாலாவுக்கு சென்றுள்ளார். கமலா ஹாரிஸ் துணை அதிபரான பின், செல்லும் முதல் சர்வதேச பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், துணை அதிபர் பயணித்த விமானத்தில் சிறு தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.