கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அமெரிக்க துணை அதிபரின் பெண் செய்தி தொடர்பாளர்!
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அமெரிக்க துணை அதிபரின் பெண் செய்தி தொடர்பாளர் கேத்தி மில்லர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா பதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவில், இதுவரை, 1,725,275 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100,572 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று, 4 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க நாட்டின் துணை அதிபரான மைக் பென்ஸின், பெண் செய்தி தொடர்பாளராக கேத்தி மில்லர் என்பவர் பணியாற்றி வருகிறார். இதனையடுத்து, கேத்தி மில்லருக்கு கடந்த 8-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முந்தின நாள், டிரம்ப் நடத்திய இறைவணக்க நிகழ்ச்சியில் கேத்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.