ஊரடங்கை தளர்த்த அமெரிக்கா முடிவு.! நாட்டை முடக்குவது தீர்வாகாது – டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்காவில் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக பலியாகி வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு 3 கட்டங்களாக தளர்த்தப்படும் என அதிபர் டிரம்ப் திடீரென அறிவித்துள்ளார். இதனிடையே அங்கு கடந்த 10 நாட்களாக நாள்தோறும் சராசரியாக 2,000 பேர் பலியாகி வருகின்றனர். ஒரே நாளில் ஒரே நாளில் 32,165 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 7,10,021 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரே நாளில் 2,535 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 37,158 ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு மாதமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 90 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதனால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டி உள்ளது. மறுபுறம் பொருளாதார வீழ்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது டிரம்ப் நிர்வாகத்திற்கு அரசியல் ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கொரோனாவை விட பொருளாதாரமே முக்கியம் என்ற கட்டத்திற்கு டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த ட்ரம்ப், கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சக்கட்டத்தை தொட்டுவிட்டது. அமெரிக்க மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஊரடங்கு உத்தரவு என்பது கொரோனாவுக்கு நீண்ட கால தீர்வாக இருக்காது. மேலும் அனுமதி கிடைத்ததால் மக்கள் வேலைக்கு திரும்ப தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.
இதனால் தனது நிர்வாகம் மாகாண ஆளுநர்களுக்கு ஒரு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பப்பட்டது. அதன்படி, ஊரடங்கை 3 கட்டங்களாக தளர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் அந்தந்த மாகாணங்களின் நிலைமையை பொறுத்து மாகாண ஆளுநர்கள் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரம் மீண்டெழும் என்று அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டார். இதனிடையே அமெரிக்காவில் கொத்து கொத்தாக மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்த்தப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025