அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தன்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள குல்ஃபோர்ட் நகரில் புத்தாண்டை முன்னிட்டு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். புத்தாண்டு பிறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென சிலர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை:
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என கல்ப்போர்ட் காவல்துறைஅதிகாரி கிறிஸ் ரைல் தெரிவித்தார். இந்த மோதலை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பலர் ஓடுவதைக் காண முடிந்தது. இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…