ஈராக்கில் அமெரிக்கா ராக்கெட் தாக்குதல்.! ராணுவ தளபதி உயிரிழப்பு.!
- ஈரான் பாக்தாக் விமான நிலையத்தில் அமெரிக்க நடத்திய தாக்குதலில் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சோலிமானி இறந்தனர்.
- அமெரிக்க அதிபரின் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்பு உள்ளது. அமெரிக்க நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை இராணுவ தளபதி காசிம் சோலிமானி மற்றும் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் இறந்தனர்.
அமெரிக்க அதிபரின் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஈராக்கில் தாக்குதல் நடத்திய பின் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க கொடியை பதிவிட்டுள்ளார்.
— Donald J. Trump (@realDonaldTrump) January 3, 2020
ஈராக்கில் அமெரிக்க தூதாக அதிகாரிகளை தாக்க காசிம் சோலிமானி திட்டமிட்டதாகவும் , அதனால் காசிம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.