இந்திய பயணத்திற்கு தடை விதித்த அமெரிக்க அதிபரை விமர்சிக்கும் அமெரிக்க குடியரசு கட்சிகள்!

Published by
Rebekal

கடந்த ஆண்டு டிரம்ப் இந்தியாவிற்கும் ஐரோப்பியாவிற்கும் இடையே பயணத்தைத் தடை செய்த பொழுது, எதிர்ப்பு தெரிவித்த ஜோ பைடன் தற்போது இந்தியாவிற்கான  பயணத்தை தடை செய்திருப்பது அமெரிக்க குடியரசு கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதிலும் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவிற்கு வருகை தரக் கூடிய விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய விமானங்களுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பல இடங்களில் இந்திய மக்கள் தங்கள் நாடுகளுக்கு நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் கொரோனா இந்தியாவில் அதிகரித்து வருவதால் தான்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களும் தற்பொழுது இந்தியாவிற்கு செல்லக்கூடிய பயணத்திற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் ஜோ பைடன் தற்பொழுது குடியரசு கட்சியின் சட்டம் இயற்றுபவர்களால்  விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதாவது நட்பு நாடான இந்தியாவுடன் பயண கட்டுப்பாடு அறிவிப்பது பகுத்தறிவு அல்ல என காங்கிரஸ் கட்சி டிம் புர்செட் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகம் இருப்பதால் இந்தியாவிற்கான பயணக் கட்டுப்பாடுகள் சில அறிவிக்கப்பட்டு அந்த கொள்கைகள் அனைத்தும் மே 4ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் ஜென் சாகி அவர்கள் தெரிவித்ததை அடுத்து. குடியரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆரிங்டன்னும் விமர்சித்துள்ளார்.

அதாவது எல்லையை திறந்து வைத்துவிட்டு இந்தியாவிற்கான பயண தடையை அமல்படுத்துவது முன் கதவை பூட்டி விட்டு பின் கதவை அகலமாகத் திறந்து வைப்பது போன்றது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் ஐரோப்பாவிற்கு பயணத்தடை அறிவித்த பொழுது ஜோ பைடன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்துள்ளார். அதை அவருக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன் என காங்கிரசின் பெண் லாரன் போபர்ட் கூறியுள்ளார்.

அதாவது, ஒரு சுவர் கொரோனா வைரஸ் நிறுத்தாது எனவும் உலகின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் அனைத்து பயங்களையும் தடை செய்வது அதை தடுக்காதது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு கிரகத்தில் உள்ள எந்த ஒரு நபரையும் கொரோனா பாதிக்கும் எனவும் இதை எதிர்த்து போராடுவதற்கு தங்களுக்கு ஒரு முறையான திட்டம் தேவை எனவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு டுவிட்டரில் தெரிவித்து இருந்ததை லாரன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

22 minutes ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

30 minutes ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

2 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

3 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

5 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

6 hours ago