இந்திய பயணத்திற்கு தடை விதித்த அமெரிக்க அதிபரை விமர்சிக்கும் அமெரிக்க குடியரசு கட்சிகள்!
கடந்த ஆண்டு டிரம்ப் இந்தியாவிற்கும் ஐரோப்பியாவிற்கும் இடையே பயணத்தைத் தடை செய்த பொழுது, எதிர்ப்பு தெரிவித்த ஜோ பைடன் தற்போது இந்தியாவிற்கான பயணத்தை தடை செய்திருப்பது அமெரிக்க குடியரசு கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதிலும் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவிற்கு வருகை தரக் கூடிய விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய விமானங்களுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பல இடங்களில் இந்திய மக்கள் தங்கள் நாடுகளுக்கு நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதற்கு காரணம் கொரோனா இந்தியாவில் அதிகரித்து வருவதால் தான்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களும் தற்பொழுது இந்தியாவிற்கு செல்லக்கூடிய பயணத்திற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இதனால் ஜோ பைடன் தற்பொழுது குடியரசு கட்சியின் சட்டம் இயற்றுபவர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். அதாவது நட்பு நாடான இந்தியாவுடன் பயண கட்டுப்பாடு அறிவிப்பது பகுத்தறிவு அல்ல என காங்கிரஸ் கட்சி டிம் புர்செட் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அதிகம் இருப்பதால் இந்தியாவிற்கான பயணக் கட்டுப்பாடுகள் சில அறிவிக்கப்பட்டு அந்த கொள்கைகள் அனைத்தும் மே 4ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் ஜென் சாகி அவர்கள் தெரிவித்ததை அடுத்து. குடியரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஆரிங்டன்னும் விமர்சித்துள்ளார்.
அதாவது எல்லையை திறந்து வைத்துவிட்டு இந்தியாவிற்கான பயண தடையை அமல்படுத்துவது முன் கதவை பூட்டி விட்டு பின் கதவை அகலமாகத் திறந்து வைப்பது போன்றது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் ஐரோப்பாவிற்கு பயணத்தடை அறிவித்த பொழுது ஜோ பைடன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்துள்ளார். அதை அவருக்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன் என காங்கிரசின் பெண் லாரன் போபர்ட் கூறியுள்ளார்.
அதாவது, ஒரு சுவர் கொரோனா வைரஸ் நிறுத்தாது எனவும் உலகின் வேறு எந்தப் பகுதியிலிருந்தும் அனைத்து பயங்களையும் தடை செய்வது அதை தடுக்காதது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு நாட்டையும் ஒவ்வொரு கிரகத்தில் உள்ள எந்த ஒரு நபரையும் கொரோனா பாதிக்கும் எனவும் இதை எதிர்த்து போராடுவதற்கு தங்களுக்கு ஒரு முறையான திட்டம் தேவை எனவும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு டுவிட்டரில் தெரிவித்து இருந்ததை லாரன் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.