கொரோனா தடுப்பு மருந்து.. 3- ஆம் கட்ட சோதனையை எட்டிய அமெரிக்கா- அதிபர் டிரம்ப்!
அமெரிக்காவின் கொரோனா தடுப்பு மருந்தான “அஸ்ட்ரா ஜெனிகா”, 3- ம் கட்ட சோதனையை எட்டியுள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிள கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா, “அஸ்ட்ரா ஜெனிகா” என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. அந்த மருந்து, தற்பொழுது 3- ம் கட்ட பரிசோதனையை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனோல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.