US ராப் பாடகர் வில்லியம், இயர்போன்கள் மற்றும் ஏர் பியூரிஃபையர்கள் கொண்ட ஒரு புது வகையான மாஸ்க் அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அதன் விலை ரூபாய்.22 ஆயிரம் ஆகும்.
அமெரிக்க ராப் பாடகர் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளரான Will.i.am என அழைக்கப்படும் வில்லியம் ஆடம்ஸ், ஹனிவெல் நிறுவனத்துடன் இணைந்து ‘சிலிகான் XUPERMASK’ ஐ உருவாகியுள்ளார்.இதில் வயர்லெஸ் இயர்போன்கள், மைக்ரோஃபோன் மற்றும் புளூடூத் 5.0 இணைப்பு ஆகியவை இடம்பெறுகிறது.மேலும் “Xupermask”ஆனது HEPA filters மற்றும் மூன்று சிறிய அளவிலான ஃபேனைக் கொண்டுள்ளது.அதனைக்கொண்டு சிறப்பான காற்றோட்டம் பெறமுடியும். இதன் விலை 299 டாலர் (ரூபாய்.22,000) ஆகும்.
இந்த மாஸ்க் 7 மணி நேரம் சார்ஜ் தாங்கும் வசதிக் கொண்டது.தேவைப்பட்டால் சார்ஜ் செய்து பின் அணியலாம்.இத்தகைய மாஸ்க், ஆண்டுக்கு 365 நாட்கள் வரை அணியக்கூடிய ஆயுள் கொண்டது.மேலும் இதில் LED பல்புகள் உள்ளது.இந்த xupermask கருப்பு மற்றும் ஆரஞ்சு அல்லது வெள்ளை மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டு நிறங்களில் மட்டுமே தயாராகின்றன.இதனைத் தொடர்ந்து விரைவில் விற்பனைக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட இந்த புதுமையான ஸ்மார்ட் மாஸ்க் பல தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப்பற்றி வில்லியம் கூறுகையில்,”எங்கள் புதிய ஃபேஷன், தொழில்நுட்பம் மூலம் ‘XUPERMASK’ ஐ உருவாக்கியுள்ளோம். தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு தேவைப்படும் இந்த புதிய யுகத்தில், XUPERMASK என்பது நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உயர் தொழில்நுட்ப செயல்திறனுடன் கூடிய பாதுகாப்பை தருகிறது. ஹனிவெல்லுடன் இணைந்து நான் இந்த அதிநவீன ஸ்மார்ட் மாஸ்க்கை வடிவமைத்துள்ளேன்”, என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…