அமெரிக்க ராப் பாடகர் வில்லியமின் சூப்பர் மாஸ்க்..! விலை 22 ஆயிரமாம்.! அப்படி என்ன இருக்கு?.

Default Image

US ராப் பாடகர் வில்லியம், இயர்போன்கள் மற்றும் ஏர் பியூரிஃபையர்கள் கொண்ட ஒரு புது வகையான மாஸ்க் அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அதன் விலை ரூபாய்.22 ஆயிரம் ஆகும்.

அமெரிக்க ராப் பாடகர் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளரான Will.i.am என அழைக்கப்படும்  வில்லியம் ஆடம்ஸ், ஹனிவெல் நிறுவனத்துடன் இணைந்து ‘சிலிகான் XUPERMASK’ ஐ உருவாகியுள்ளார்.இதில் வயர்லெஸ் இயர்போன்கள், மைக்ரோஃபோன் மற்றும் புளூடூத் 5.0 இணைப்பு ஆகியவை  இடம்பெறுகிறது.மேலும் “Xupermask”ஆனது HEPA filters மற்றும் மூன்று சிறிய அளவிலான ஃபேனைக் கொண்டுள்ளது.அதனைக்கொண்டு சிறப்பான காற்றோட்டம் பெறமுடியும். இதன் விலை 299 டாலர் (ரூபாய்.22,000) ஆகும்.

இந்த மாஸ்க் 7 மணி நேரம் சார்ஜ் தாங்கும் வசதிக் கொண்டது.தேவைப்பட்டால் சார்ஜ் செய்து பின் அணியலாம்.இத்தகைய மாஸ்க், ஆண்டுக்கு 365 நாட்கள் வரை அணியக்கூடிய ஆயுள் கொண்டது.மேலும் இதில் LED பல்புகள் உள்ளது.இந்த xupermask  கருப்பு மற்றும் ஆரஞ்சு அல்லது வெள்ளை மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டு நிறங்களில் மட்டுமே தயாராகின்றன.இதனைத் தொடர்ந்து விரைவில் விற்பனைக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட இந்த புதுமையான ஸ்மார்ட் மாஸ்க் பல தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப்பற்றி வில்லியம் கூறுகையில்,”எங்கள் புதிய ஃபேஷன், தொழில்நுட்பம் மூலம் ‘XUPERMASK’ ஐ உருவாக்கியுள்ளோம். தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு தேவைப்படும் இந்த புதிய யுகத்தில், XUPERMASK என்பது நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு உயர் தொழில்நுட்ப செயல்திறனுடன் கூடிய பாதுகாப்பை தருகிறது. ஹனிவெல்லுடன் இணைந்து நான் இந்த அதிநவீன ஸ்மார்ட் மாஸ்க்கை  வடிவமைத்துள்ளேன்”, என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen