அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டியில் வாக்குச் சீட்டை எங்கே போட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு, தமிழில் பதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும், அடுத்த மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் பதவிக்கு மைக் பென்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் போட்டியிடுகின்றனர். இருவரும் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் தேதிக்கு முன்பாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் உள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆர்வமாக வந்து தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் தொடங்க இன்னும் 5 நாட்களே உள்ளநிலையில், வாக்குப்பெட்டிகளை கொண்டுசெல்லும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பெட்டியில் தமிழில் அறிவிப்புகள் பதிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சீட்டை எங்கே போட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு தமிழில் பாதிக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…