அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. அங்கு, கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. அடுத்த யார் ஆட்சிக்கு வருவார்? அவரின் கொள்கைகள் என்ன? போன்ற கேள்விகளே மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
எனவே அங்கு தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அங்கு தேர்தல் பரப்புரைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, அமெரிக்க ஊடகங்களும் தொடர்ந்து கருத்து கணிப்புகளை நடத்தி கொண்டே வருகிறது. இதுவரை நடந்த கருத்துக்கணிப்பில் அதிபர் ட்ரம்பை விட, முன்னாள் துணை அதிபரான ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பைடன் முன்னிலையில் உள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு அதிபர் டிரம்ப் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதற்க்கு காரணம், கொரோனா வைரஸை கையாண்ட விதம். நோய் பரவுவதை ஆரம்பத்தில் இருந்து கவனிக்காததே அது தற்பொழுது இந்தளவுக்கு வந்ததற்கு காரணம் என மக்கள் சிலர் கூறிவருகின்றனர்.
அதுமட்டுமின்றி, டிரம்ப் ஆட்சிக்காலத்தில் அவர் எடுத்த சில முடிவுகள், அவரின் புகழை பெரிதளவில் குறைத்து. மேலும், ஜார்ஜ் பிலோய்ட் கொலை வழக்கில் டிரம்பின் சர்ச்சைகுரிய பேச்சு மற்றும் கறுப்பின மக்களுக்கு எதிரான செயல்கள், அமெரிக்க மக்களுக்கே முன்னுரிமை, போன்ற கொள்கைகளே மக்கள் டிரம்பை எதிர்க்க காரணமாக அமைந்தது.
அதிபர் டிரம்புக்கு வெள்ளையின மக்கள், வயதானவர்கள் மற்றும் ஆண்களின் ஆதரவு அதிகளவில் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, ஜனநாயக கட்சி வேட்பாளரான பிடனுக்கு கருப்பின மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…