அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் ஈராக் பயணம்….!!
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈராக் நாட்டிற்கு திடீர் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அவரது மனைவி மெலானியாவுடன் திடீர் பயணமாக ஈராக் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.ஈராக் சென்ற அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈராக்கில் பாக்தாத்துக்கு மேற்கே உள்ள அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளத்திற்கு சென்றார். அங்கே அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க மற்றும் ஈராக் கூட்டுப்படைகளின் விமான தளத்தில் அமெரிக்க வீரர்களின் சிறப்பான பணிகளை பாராட்டியது மட்டுமில்லாமல் வீரர்களுக்கு அதிபர் டிரம்ப் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். சிரியாவில் இருந்க்கும் அமெரிக்க படைகளை திரும்ப பெறுவது குறித்த முடிவு எடுத்த பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் பயணமாக ஈராக்கிற்கு சென்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.