அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிங் ஜோங் உன் சந்திப்பு உறுதியானது ..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரிய அதிபர் கிங் ஜோங் உன் இடையிலான சந்திப்பு 99 சதவீதம் நடைபெறும் என தென்கொரியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் மோதல் போக்கை வடகொரியா கைவிட முடிவு செய்ததை அடுத்து, சிங்கப்பூரில் வரும் ஜூன் 12ஆம் தேதி டிரம்ப் – கிங் ஜோங் உன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வடகொரியா தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை ஒப்படைத்தால் மட்டுமே, அந்த நாட்டு மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க முடியும் என அமெரிக்கா கூறியது.
இதனால், ஆத்திரமடைந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக முடிவெடுத்தால், ஜூன் 12ஆம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
இதனால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் அமைதிபேச்சுவார்த்தை 99 சதவீதம் நடைபெறும் என தென்கொரியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.