அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை..!

இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த சில வாரங்களிலேயே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 2021 அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியன் டைப்ரிங்-கெஜெடே அவர் தனது நியமனக் கடிதத்தில் கூறியதாவது; இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவுகளை ஸ்தாபிப்பதில் டிரம்ப் நிர்வாகம் முக்கிய பங்கு வகித்துள்ளது என்று கூறினார்.
முரண்பட்ட கட்சிகளுக்கிடையேயான தொடர்பை எளிதாக்குவதில் டிரம்ப் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்று டைப்ரிங்-கெஜெடே கூறினார். மத்திய கிழக்கில் இருந்து ஏராளமான வீரர்களை திரும்பப் பெற்றதற்காக டிரம்பையும் அவர் பாராட்டினார்.
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையிலான உறவை இயல்பாக்கும் ஒரு மத்திய கிழக்கு ஒப்பந்தத்திற்கான கையெழுத்திடும் விழாவை செப்டம்பர் 15 ஆம் தேதி டிரம்ப் நடத்துவார் என கூறப்படுகிறது.
அமைதி நோபல் பரிசுக்கு டிரம்ப் பரிந்துரைக்கப்படுவது இது முதல் முறை அல்ல; 2018 ஆம் ஆண்டில் வட கொரியாவின் கிம் ஜாங் உனுடன் ட்ரம்ப் சிங்கப்பூர் உச்சிமாநாட்டைத் தொடர்ந்து, நோபல் பரிசுக்கு டைப்ரிங்-கெஜெடே மற்றும் மற்றொரு நோர்வே அதிகாரியுடன் பரிந்துரைக்கப்பட்டார். ஒபாமா 2009 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025
நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!
March 12, 2025
அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?
March 12, 2025