தேர்தல் சுற்று-உறுதியான தொற்று!”ஐயம் ஃபைன்” ட்ரம்ப் நம்பிக்கை ட்விட்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் நலமோடு இருப்பதாக ட்விட் செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்ட நிலையில், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது வால்டர் ரீட் ராணுவ மருத்துவமணையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் இருவரும் நலமாக இருப்பதாக ட்விட் செய்துள்ளார். ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ட்ரம்பிற்கு காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் அவர் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.