அடுத்த மாதம் நடக்கும் குவைத் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் அமெரிக்க அதிபர்..!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் அடுத்த மாதம் தென் கொரியா மற்றும் ஜப்பான் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மாதம் டோக்கியோவில் குவைத் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜோ பைடன் கலந்துகொள்ள உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவரும் இந்த மாநாட்டின் போது சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜோ பைடன் மே 20 முதல் 24 ஆம் தேதி வரை தென் கொரியா மற்றும் ஜப்பான் செல்ல உள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களுக்கிடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டின் பொழுது ஜோ பைடன் அவர்கள் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் குவைத் உச்சி மாநாடு குழு தலைவர்களையும் சந்திப்பார் என கூறப்படுகிறது.