ஐநா சபையின் 75 வது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்ல மறுத்த அமெரிக்க அதிபர்!
ஐநா சபையின் 75 வது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்ல அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஐநா சபையின் 75-வது ஆண்டு தினத்தை நினைவு கூறக்கூடிய பொது சபை கூட்டம் இன்று துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் ஐநா பொதுச்செயலாளர், தலைவர் ஆகியோர் நேரில் பங்கேற்றுள்ளனர். ஆனால் உலக தலைவர்கள் பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, மாறாக காணொளிக்காட்சி வழியாக உரையாற்றி அவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் அவர்கள் ஐநா சபையை மறி ஈரானுக்கு சாதகமாக பொருளாதார தடைகளை மறு சீரமைத்ததை அடுத்து உலக அமைப்பி75 ஆவது ஆண்டு விழாவுக்கு நேரில் செல்லாமல் புறக்கணித்துள்ளார்.
பலருக்கு நேரில் வரக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அதிபர் டிரம்ப் அவர்களுக்கு நேரில் வருவதற்கான வாய்ப்பும் இருந்துள்ளது. மேலும் அனைத்து உலக தலைவர்களுக்கும் உரை அனுப்பியது போல அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பொது சபை கூட்டத்தில் முதல் தலைவராக பேசுவதற்கு ட்ரம்ப் அவர்கள் பட்டியலிடப்பட்டு இருந்துள்ளார். ஆனால் டிரம்ப் காணொலிக் காட்சி மூலமாக மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.