அயர்லாந்து பிரதமருக்கு வணக்கம் வைத்த அமெரிக்க அதிபர்.! காரணம் இதுதான்.?

Default Image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து பிரதமருடன் சந்திப்பில் கை குழுக்கமால் (handshake) இந்திய முறைப்படி வணக்கம் கூறிய நிகழ்வு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் வாஷிங்டனில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் மற்றும் அதிபர் ட்ரம்ப் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  இருவரும் கை குலுக்கவில்லை, இதற்கு மாறாக இந்திய முறைப்படி வணக்கம் வைத்தனர். 

இதுகுறித்து அமெரிக்க அதிபர் கூறுகையில், நாங்கள் இருவரும் கை குலுக்கவில்லை, அந்த நேரத்தில் எங்களுக்குள் ஒரு வித்தியாசமான உணர்வு இருந்தது. நான் சமீபத்தில்தான் இந்திய சென்று வந்தேன் என்றும் அங்குதான் வணக்கம் முறையை கற்றுக்கொண்டேன் என தெரிவித்தார். மேலும் இது மிகவும் எளிமையாக இருக்கு என்றும் இந்திய பயணம் சென்று வந்த பிறகு நான் வணக்கம் முறையை தான் பின்பற்றி வருகிறேன் என குறிப்பிட்டார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்