வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அமெரிக்க அதிபரின் மகன்.! ஜோ பைடன் அரசியலுக்கு புதிய சிக்கல்.?

Published by
மணிகண்டன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹண்டர் பிடன், கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என டேவிட் வெயிஸ் என்பவர் அமெரிக்கா, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் 56 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.

ஹண்டர் பைடன் மீது தவறான வருமானவரி கணக்குகள், வரி ஏய்ப்பு, உரிய வரி செலுத்தாதல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹண்டர் பைடன் மீதான குற்றசாட்டுகள் தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பில் இருக்கும் ஜோ பைடனுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிசூடு.! 4 பேர் உயிரிழப்பு.! 

அடுத்தாண்டு (2024) இறுதியில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருந்தார். ஹண்டர் பைடன் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், அடுத்தாண்டு தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுவது சிரமமாகிவிடும். குற்றம்  நிரூபிக்கப்பட்டால் தற்போதே அதிபர் பொறுப்பில் இருந்து வெளியேற்ற எதிர்க்கட்சிகள் நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

இதற்கு முன்னர்,  ஹண்டர் பைடன் துப்பாக்கி வாங்கினார் என்றும், போதைப்பொருள் பயன்படுத்தினார் என்றும் பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்த போதும் அதனை ஜோ பைடன் முழுதாக மறுத்தார். தற்போது கூறப்பட்டுள்ள வரி ஏய்ப்பு குறித்த புதிய குற்றச்சாட்டுகள் காரணமாக ஹண்டர் பிடன் அடுத்த ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது.

ஹண்டர் பிடன் 2016 முதல் 2020 வரையில் 7 மில்லியன் அமெரிக்க டாலர்  சம்பாதித்ததாகவும், அந்த பணத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

Recent Posts

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

32 minutes ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

33 minutes ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

1 hour ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

1 hour ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

2 hours ago