வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அமெரிக்க அதிபரின் மகன்.! ஜோ பைடன் அரசியலுக்கு புதிய சிக்கல்.?
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹண்டர் பிடன், கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என டேவிட் வெயிஸ் என்பவர் அமெரிக்கா, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் 56 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
ஹண்டர் பைடன் மீது தவறான வருமானவரி கணக்குகள், வரி ஏய்ப்பு, உரிய வரி செலுத்தாதல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹண்டர் பைடன் மீதான குற்றசாட்டுகள் தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பில் இருக்கும் ஜோ பைடனுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிசூடு.! 4 பேர் உயிரிழப்பு.!
அடுத்தாண்டு (2024) இறுதியில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருந்தார். ஹண்டர் பைடன் மீதான குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், அடுத்தாண்டு தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுவது சிரமமாகிவிடும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தற்போதே அதிபர் பொறுப்பில் இருந்து வெளியேற்ற எதிர்க்கட்சிகள் நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னர், ஹண்டர் பைடன் துப்பாக்கி வாங்கினார் என்றும், போதைப்பொருள் பயன்படுத்தினார் என்றும் பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்த போதும் அதனை ஜோ பைடன் முழுதாக மறுத்தார். தற்போது கூறப்பட்டுள்ள வரி ஏய்ப்பு குறித்த புதிய குற்றச்சாட்டுகள் காரணமாக ஹண்டர் பிடன் அடுத்த ஆண்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என கூறப்படுகிறது.
ஹண்டர் பிடன் 2016 முதல் 2020 வரையில் 7 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்ததாகவும், அந்த பணத்தை தனது ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது.