வருமான வரி கணக்குகளை வெளியிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ். ..!

வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ்.
அமெரிக்க அரசு சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும் உயர் பதவியில் இருப்பவர்கள் தங்களது வருமான வரி கணக்குகளை வெளியிட வேண்டும். அந்தவகையில் கடந்த வருடம் 2020 ல் வருமான வரி கணக்குகளை வெளியிட்டார் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்.
அதிலும், அமெரிக்க அதிபர் ஜோ பாய்டனின் வருமானத்தை விட துணை அதிபர் கமலா ஹாரிஷின் வருமானம் 10 லட்சம் டாலர் அதிகமாக உள்ளது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதனை பற்றி வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் இருவரும் ஒன்றாக இணைந்து வருமான வரி கணக்குகளை வெளியிட்டுள்ளனர். ஜில் பைடன் ஒரு பேராசிரியர். இவர்களின் வருமானம் 2020-ல் 6,07,336 டாலர்கள் என்று வெளியிட்டுள்ளனர். மேலும், 2019-ல் 9,85,223 டாலர்களாக அவர்களது வருமானம் இருந்துள்ளது. மேலும் இவர்கள் 2020-ல் தனது வருமானத்திலிருந்து 25.9% வருமான வரியாக (1,57,414 டாலர்) செலுத்தியுள்ளனர்.
மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக்ளஸ் எம்ஹாப் இவர்களின் மொத்த வருமானம் 2020-ல் 16,95,225 டாலராக இருந்துள்ளது. இவற்றில் 36.7% வருமான வரியாக (6,21,893 டாலர்) செலுத்தியுள்ளனர். மேலும் இவர்கள் குடியிருக்கும் கலிபோர்னியா மாகாணத்திலும் 1,25,004 டாலர் வருமான வரி செலுத்தியுள்ளனர்.
இதுதவிர, பல அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளித்தும் வருகின்றனர். அந்த வகையில், பத்துக்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளுக்கு 30,704 டாலர்களை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் வழங்கியிருக்கின்றனர். மேலும், 27,006 டாலர்களை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக கமலா ஹாரிஸும் அவரது கணவரும் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025