அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தொற்று தற்பொழுது வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் பைசர், மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன.
அனைத்து தடுப்பூசிகளும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் இரண்டு டோஸாக செலுத்தப்பட வேண்டும். இந்நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அமெரிக்க மக்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா இரண்டாம் அலையின் பொழுது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த உருமாற்றம் அடைந்த கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு அமெரிக்க சுகாதாரத்துறை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
அதன் அடிப்படையில் அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள், கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் 60 மில்லியன் மக்கள் இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்களாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…