ஒருவழியாக முக்கவசம் அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதன்முறையாக தற்போது முகக்கவசம் அணிந்துள்ளார்.
உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 32,90,994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.1,36,621 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்த வந்த சமயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்தார்.
டிரம்பின் இந்த செயலை பலரும் விமர்சனம் செய்து வந்தனர் .குறிப்பாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ,”முகக்கவசம் அணியாமல் மரணத்தை வரவைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முட்டாள்” என கூறினார். இந்நிலையில் வாஷிங்டன்னில் உள்ள மருத்துமனையில் காயமடைந்த வீரர்களை பார்வையிட அமெரிக்க அதிபர் சென்றார்.அப்பொழுது,அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணிந்து வந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025