இந்தியாவை கடுமையாக விமர்ச்சிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்!!!
- அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும்.
- அதனால் இந்தியாவிற்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகைகளை ரத்து செய்ய இருப்பதாக டிரம்ப் முடிவு செய்துள்ளார்
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரை வரி விதிப்பதாகவும். இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி எதுவும் விதிக்கப்படு இல்லை என டிரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவிற்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகைகளை ரத்து செய்ய இருப்பதாக டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதேபோல் துருக்கி நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகையையும் பறிக்க உள்ளனர்.
இந்நிலையில் இந்தியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக சலுகைகளை ரத்து செய்ய இருப்பதாக அமெரிக்க வர்த்த அலுவலக தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.