குடியேற்றம் தொடர்பான மசோதாவில்  கையெழுத்திட  முடிவு செய்த அமெரிக்க அதிபர்

Default Image

குடியேற்றம் தொடர்பான மசோதாவில்  கையெழுத்திட  முடிவு  செய்துள்ளார் அமெரிக்க அதிபர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும் தற்போது  நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. அடுத்த யார் ஆட்சிக்கு வருவார்? அவரின் கொள்கைகள் என்ன? போன்ற கேள்விகளே மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

 அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ,அடுத்த மாதத்திற்குள் குடியேற்றம் தொடர்பான மசோதாவில் கையெழுத்திட  முடிவு செய்துள்ளார் .இந்த மசோதாவில் ,முக்கிய அம்சமாக குழந்தை பருவத்தில் அமெரிக்காவிற்குள் குடியேறியவர்களை பாதுகாக்கும்  (Deferred Action for Childhood Arrivals) திட்டம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்