போஸ்டன் மாரத்தான் போட்டியை ஒத்திவைத்தது அமெரிக்கா.!
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக, பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. மேலும் பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனிடையே கொரோனா வைரஸை உலக முழுவதும் பரவும் தொற்று நோய் என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது.
The 124th Boston Marathon has been postponed – the @BAA understands the city’s decision that the marathon cannot be held on April 20, and we offer our full support to take all efforts to postpone until September 14, 2020. Read more: https://t.co/CsnHNKOAZz pic.twitter.com/eBEGDM18FT
— Boston Marathon (@bostonmarathon) March 13, 2020
இந்த நிலையில் அமெரிக்காவின் கிழக்கு மாசசூசெட்ஸில் உள்ள பெரிய பாஸ்டனில் பல நகரங்களால் நடத்தப்படும் போஸ்டன் மாரத்தான் ஏப்ரல் 20ம் தேதி போட்டியை நடத்த அந்நாடு முடிவு செய்திருந்தது. இதனிடையே கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இப்போட்டியை செப்டம்பர் மாதம் 14ம் தேதி ஒத்திவைத்தனர். இந்த போட்டி எப்போதும் ஏப்ரல் 3வது திங்கட்கிழமை தேசபக்தர்கள் தினத்தில் நடைபெறும். 1897ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்வு, 1896 கோடைகால ஒலிம்பிக்கில் முதல் மராத்தான் போட்டியின் வெற்றியால் ஈர்க்கப்பட்டது. இந்த நிலையில் 124வது ஆண்டுக்கான போஸ்டன் மாரத்தான் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என போட்டி நடத்தும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.