ரஷ்யாவை எதிர்த்து போராட உக்ரைனுக்கு உதவ முன்வந்த அமெரிக்கா..!

Default Image

ரஷ்யாவை எதிர்த்து போராட  பாதுகாப்பு உதவிக்காக 600 மில்லியன் டாலர் நிதி அளிக்க அமெரிக்க அதிபர் உத்தரவு.

உலகம் முழுவதும் உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள உக்ரைன் உலகம் முழுவதிலும் இருந்து உதவிக்காக கெஞ்சுகிறது. ஆனால் இதுவரை உக்ரைனுக்கு எந்த பெரிய நாட்டிலிருந்தும் நேரடி உதவியைப் பெற முடியவில்லை. ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதற்கிடையில், ரஷ்யாவை எதிர்த்து போராட  உக்ரைனுக்கு உடனடி இராணுவ உதவிக்கான நிதியை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு ஒட்டுமொத்த உதவியாக ரூ.250 மில்லியன் டாலர்களையும், பாதுகாப்புத் துறைக்காகவும், ராணுவப் பயிற்சிக்காக ரூ.350 மில்லியனையும் அமெரிக்கா வழங்கும் என அறிவித்துள்ளார்.

புடினை தடை செய்த அமெரிக்கா :

ஷ்யா-உக்ரைன் போரின் மத்தியில், ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனுடன், ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, முதல் துணை பாதுகாப்பு மந்திரி மற்றும் ஆயுதப்படைகளின் தலைமை தளபதி வலேரி ஜெராசிமோவ் ஆகியோருக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

தொடர்ச்சியான தாக்குதல்:

உக்ரைன் தலைநகர் கீவ்வில் நேற்று முதல் போர் நடந்து வருகிறது.  இருப்பினும் உக்ரைன் இராணுவம் தெருக்களில் இறங்கி தலைநகரைக் கைப்பற்ற  அயராது உழைத்து வருகிறது.

பேச்சுவார்த்தை:

போர் மோதலை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துமாறு உக்ரைன்அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிடம் அழைப்பு விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்