8 நாடுகளின் பயண கட்டுப்பாடுகளை நீக்கிய அமெரிக்கா…!
ஓமைக்ரான் பரவலால் 8 ஆப்பிரிக்க நாடுகளின் பயணிகள் நுழைய விதிக்கப்பட்ட தடையை அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார்.
முதலில் சீனாவின் யுகான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தாக்குதலை நடத்தி வந்தது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொற்று பரவல் பரவி வந்த நிலையில், இந்த தொற்று பலவிதங்களில் உருமாற்றம் அடைந்து வருகிறது.
அந்த வகையில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தீவிர தாக்குதல் நடத்தி வந்த நிலையில், புதிதாக தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். பல நாடுகள் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோத்தோ, சுவாசிலாந்து, மொசாம்பிக், மலாவி ஆகிய 8 நாடுகளின் பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீக்கியது.
இந்த 8 தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான தற்காலிக பயணக் கட்டுப்பாடுகளை டிசம்பர் 31 அன்று முதல் நீக்கப்படும் என்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் அறிவித்த்துள்ளார். அமெரிக்காவிற்குள் ஓமிக்ரானின் பரவலை தடுக்கும் விதமாக நவம்பர் 26 அன்று அமெரிக்கா பயணக் கட்டுப்பாடுகளை இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.