தலிபான் தலைவருடன் அமெரிக்க உளவுத்துறை தலைவர் வில்லியம் பர்ன்ஸ் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியுள்ளதால் தலிபான்கள் நாட்டை கைப்பற்றி உள்ளனர். மேலும், தலிபான்கள் விரைவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். எனவே அந்நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேறிவிட வேண்டும். இல்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கூடுதலாக கால அவகாசம் தேவைப்படும் என அமெரிக்க படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது தலிபான் தலைவர்களில் முக்கிய நபரான முல்லா அப்துல் கானி என்பவரை அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றதாகவும், இந்த சந்திப்பின்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் பிற நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…