கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.ஆனால் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நிலவியது.இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே டிரம்ப் கடந்த 4-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.மேலும் தேர்தலில் மோசடி நடைபெற்றதால் நீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் என்றும் கூறினார்.
ஜோ பைடன் அணியினர் பேரணி :
ஆனால் டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றம் சென்றால் வழக்கை சந்திக்க ஜோ பைடன் தரப்பு தயார் என்று தெரிவித்தது .ஆனால் பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாக தாமதம் ஏற்பட்டது. அதன்படி, பல முக்கிய மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்துள்ளது என்றும், அதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால் அந்த மாகாணங்களில் டிரம்ப் தரப்பின் வழக்குகளை நீதிமன்றங்கள் நிராகரித்தன.
வாக்குகளை எண்ண வேண்டும் VS எண்ண வேண்டாம் :
ஒரு புறம் டிரம்ப் வழக்கினை தொடுத்து வாக்கு எண்ணிக்கை வேண்டாம் என்று கூறினாலும் , பைடன் தரப்பு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.இதன் வெளிப்பாடாக ஒவ்வொரு வாக்கையும் நிச்சயம் எண்ண வேண்டும் என்று நியூயார்க்கில் ஜோ பைடன் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்னார்கள்.
கடந்த 7-ஆம் தேதி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார் .அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பைடனை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் 217 சபை ஓட்டுக்களை மட்டுமே பெற்றார்.ஆகவே ஜோ பைடன், அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி தனது அதிபர் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குகளும் மறுபடியும் எண்ணப்படும் என ஜார்ஜியா மாகாணம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .டிரம்ப் தரப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜார்ஜியாவில் மட்டும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று . ஏற்கெனவே பைடன் வெற்றி பெற்றுவிட்டதால், ஜார்ஜியாவின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவு அவரது வெற்றியை பாதிக்காது.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…